பூரியான் பாத்திஹாவும் ஜஹபர் சாதிக்கின் சமத்துவப்பாதையும்…
பூரியான் பாத்திஹாவும் ஜஹபர் சாதிக்கின் சமத்துவப்பாதையும்… ஜஹபர் சாதிக் அவுலியாவின் பூரியான் பாத்திஹா என்பது பல தமிழ் முஸ்லிம் குடும்பங்களில் வழிவழியாக வந்த மரபாக இன்றுவரைக்கும் இருக்கிறது. பூரியான் பாத்திஹாவிற்கு செய்யும் "பூரியான்" எனும் இனிப்பு, பேறுகால பாத்திஹா, நாகூர் ஆண்டவர் கந்தூரி, மீலாதுப் பெருநாள் என்று பல தமிழ் முஸ்லிம் பண்டிகைகளுடன் ஒன்றியதாகவும் இருந்து வருகிறது. ஆனால் ரஜப் 22இல் பயன்படுத்தும் மண்பாண்டங்களும் வெள்ளைத்துணியும் வேறந்த ஒரு பண்டிகைக்கும் செயல்படுத்துவது கிடையாது. அத்தகைய தனித்துவமும் சிறப்பும் வாய்ந்தது தான் பூரியான் பாத்திஹா ஓதுதல். ஆனால் இது தமிழ் முஸ்லிம்கள் மட்டும் கொண்டாடுவது கிடையாது. தென் இந்திய தக்கனி (உருது) முஸ்லிம்களும், கிட்டதட்ட தமிழ் முஸ்லிம்கள் செய்யும் முறைகளுடன் அதே பூரியான் பாத்திஹாவை அனுசரிக்கிறார்கள். அவர்களில், ஜஹபர் சாதிக்கை ஆறாவது இமாமாக கொண்ட ஷியா முஸ்லிம்கள் இச்சடங்கிற்கு இன்னும் கூடுதலான சிறப்பளிக்கிறார்கள். வட இந்தியாவையும் பாகிஸ்தானையும் நோக்கி செல்ல செல்ல, பூரியை...