"பாத்திமியா மஜிலிஸ் / "Fatimiya Majilis”
பாத்திமியா மஜிலிஸ் வரலாற்றின் சிகப்புக் கைத்தடம் மதீனாவிலிருந்து நெளிந்து கர்பலா மண்ணில் குருதியாய்த் தோய இன்றுவரை இரும்பு வாடை சகிக்காமல் ஊளையிடுகிறது எண்ணெய் கிணறு. ஃபதக்கின் பெருந்தொகையோ கூடி சிலந்தி வலைப்போல் பாயும் மேகமூட்டமாய் பிளாஸ்டிக் மிதக்கும் உலகின் எல்லை வரை. இதிலும் ஈச்சமரத்து இன்பச்சோலையில் மெட்ஜூல் பழத்துக்கு எண்ணினோமே! பிணங்களை மட்டுமே காயாகச் சுமக்கிறது தரைவரைக்கும் சஜ்தாவாக மடியும் மட்டை. அன்று நீ வயிறைச் சுமந்துகொண்டு மறைந்த தந்தையின் பள்ளிவாசல் வரை தத்தளித்ததில் கலைந்து ஒழுகியக் கருவையும் உன் காலடிச்சுவடியையும் மணலில் இழுத்தபடி அழித்துச்சென்ற காலப் பர்தா ஜன்னதுல் பகியைக் கூட பாக்கி வைக்கவில்லை. பச்சைப் போர்வையும் ரோசாப்பூ மாலையும் செழித்த கப்ரு ஒன்று கனவெனும் ஜியாரத்தில் மட்டுமே தெளிய, ஏதோ சுயநலத்தினால் ஒப்பனையாக இமையோடு ஒளித்து வைத்தேன். நினைவையும் சேர்த்து சாம்பலாக்கிவிட்டு தவ்ஹீதின்மேல் பழிசுமத்தியது சுண்டிய பெட்றோலும் கருந்தலை வத்திக்குச்சியும். Fatimiya Majilis The red handprint of fate that wriggled out of Medina, dredged the soil of Karbala, Iraq i...